technology

img

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கேரளம் பாய்ச்சல் வேகம்... திருவனந்தபுரம் டெக்னோபார்க்கில் 305 நிறுவனங்கள் அணிவகுப்பு...

திருவனந்தபுரம்:
பெருந்தொற்று காலத்திலும்கூட உலகத்தரம்வாய்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கேரளம் ஈர்க்கிறது. 

முதல் அலையில் டெக்னோபார்க்கில் காலியான 45 இடங்களில் புதிய நிறுவனங்கள் வந்தன. தற்போது, தகவல் தொழில் நுட்ப பூங்கா ஒன்றிலும் மூன்றிலும் 305 நிறுவனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் அடங்கும். கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் மேம்பாட்டு மையங்களை அமைக்க பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்துதல்களை தொடங்கியுள்ளன.இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரங்களின் வளர்ச்சி பட்டியலில் திருவனந்தபுரம் மற்றும்கொச்சி முன்னணியில் உள்ளதாக குளோபல் கன்சல்டன்ட் அறிக்கை (ஏஎன்எஸ்ஆர்) தெரிவிக்கிறது.இது பெருந்தொற்று நோய் ஏற்படுத்திய பேரழிவு சரிவில் இருந்து தப்பிய ஒரு சாதனை ஆகும்.

                                            *****************

ஒன்றிய அரசு உட்படபல்வேறு ஏஜென்சிகள் கேரளாவை சிறந்த வணிக - முதலீட்டு நட்பு நாடு என்று வர்ணித்துள்ளன. நிதி ஆணையம் (எஸ்டிஜி) மற்றும் பல்வேறு தொழிலதிபர் களின் அறிக்கை இதை தெளிவுபடுத்தியுள்ளன.சாதகமான தொழில்துறை நிலைமைகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், கேரளம் (37.12) கர்நாடகாவுக்கு (39.75) அடுத்த இடத்தில் உள்ளது.அதேநேரம், கோவாவுக்கு (36.90) அடுத்த இடத்தில்தான் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் (26.87) உள்ளது.ராஜஸ்தான் (17.2) குஜராத்திற்குஅடுத்ததாக உள்ளது.கேரளாவில் சாதகமான தொழில்துறை சூழல் குறித்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) பலமுறை கருத்துதெரிவித்துள்ளது. இதற்கிடையில், கேரளாவின் முதலீட்டு சூழல்குறித்து தவறான கருத்துக் களை விதைக்க சமூக ஊடகங்களில் பொய்கள் பரப்பப்படுகின்றன.

கோயங்கா பாராட்டு
ஆர்பிஜி குழுமத் தலைவர்ஹர்ஷ் கோயங்கா தனது டுவிட்டர் பதிவில், “கேரளாவில் நாங்கள் மிகப் பெரிய முதலீட்டாளர்களாக இருக்கிறோம்; மாநிலஅரசு அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது” என் றும் தெரிவித்துள்ளார்.கேரளாவின் முதலீட்டாளர் நட்பு சூழல் குறித்த- இந்த அன்பான வார்த்தைகளுக்கு ஆர்பிஜிகுழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்காவுக்கு கேரள முதல் வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.“இந்தியாவின் சிறந்த முதலீட்டு நட்பு மாநிலங்களில் கேரளாவும் ஒன்று, அது தொடர்ந்துசிறப்பாக இருக்கும்; நிலையான மற்றும் புதுமையான தொழில்கள் செழித்து வளர அரசாங்கம் துணை நிற்கும் என்றும் ஹர்ஷ் கோயங்காவுக்கு பதிலளித்துள்ளார்.

எம்.ஏ. யூசப் அலி
“ரூ.3,500 கோடி முதலீடு அல்ல, நூறு ரூபாய் முதலீடுகூடகேரளத்திலிருந்து வெளியேறக்கூடாது” என்று லுலு குழுமத்தலைவர் எம்.ஏ. யூசப் அலி கூறியுள்ளார். எதிர்கால சந்ததியினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான பொறுப்பும் கடமையும் அரசைப் போலவே தனியார் துறைக்கும் உள்ளது. சர்ச்சைகள் எழுந்தால் தலையீடுகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஷிபு பேபிஜோன்
“கேரளா தொழிலதிபர் களின் மயானம் என்றும், இங்கு வணிகம் செய்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றெல் லாம் பதிலளிப்பது சரியான போக்கு அல்ல!” என்று ஷிபு பேபிஜோன் கூறினார். “ஒரு நாட்டில் ஒரு தொழிலைத் தொடங்கி,அங்குள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி ஒரு பெரியமரமாக வளர்ந்த பின்னர் அந்த மண்ணைப் புறக்கணிக்கக் கூடாது” என்றும் ஷிபு பேபிஜோன் தனது முகநூல் பதிவில்தெரிவித்துள்ளார்.

;